அணாவா ஹெக்சாவா

 

அணா என்ற ஹெக்சா டெசிமல்

 

முதலில் அணா என்பதைப் பற்றி இளந்தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். அணா என்றால் 16 காசு ஒரு ரூபாய்க்கு 16 அணா.  இப்பொழுது கூட அரை ரூபாயை (50 காசு) எட்டு அணா என்றே பழைய செல்லப்பேரில் அழைக்கிறார்கள்.

 

இப்பொழுது ஹெக்சா டெசிமலைப் பற்றி பார்ப்போம்.

 

ஹெக்சா என்றால் லதீன் மொழியில் ஆறு,  டெசி என்றால் 10.  ஹெக்சா டெசிமல் என்றால் 16. ஆனால் இந்த 16ல் 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F என்ற எழுத்துக்கள் உபயோகிக்கப் படுகிறது.

 

F என்று எழுதினால் 16,  F F என்று எழுதினால் 16 X 16 = 256

 

உதாரணமாக நாம் உபயோகிக்கும் எழுத்துக்களுக்கு இனையான ஆஸ்கி மற்றும் ஹெக்சா டெசிமலைப் பார்ப்போம்.

0 = 00110000 = 30

1 = 00110001 = 31

9 = 00111001 = 39

A = 01000001 = 41

a = 01100001  = 61

 

கணினியில் ஆஸ்கி ( ASCII  Equalant ) மற்றும் பல முக்கியமான செயல்பாடுகளில் ஹெக்சா டெசிமல் பயன்பட்டாலும், கணினியில் உபயோகமாகும் வண்ணத்தில் உபயோகிப்பது தான் எல்லோருக்கும் தெரியும்.

 

கணினியின் வண்ணத்தில் கருப்பு நிறம் 00 00 00, வெள்ளை FF FF FF

 

ஒரு ரூமில் உள்ள 6 விளக்குகளையும் ( 0 ) அனைத்து விட்டால் இருட்டு அதாவது கருப்பு ,  6 விளக்குகளையும் Full ஆக ( F ) எறிய விட்டால் பிரகாசமான வெள்ளை என்றும் கற்பனை செய்யவும்.

 

இந்த கருப்பு 00 00 00 மற்றும் வெள்ளை FF FF FF நிறங்களுக்கு இடைப்பட்ட 16 மில்லியன் கலர்கள் ( 256 X 256 X 256 =  16777216 = True Color) கணினியில் உபயோகப் படுத்தப் படுகிறது. ஆனால் அதில் 256 கலர்களை எளிதாகவும், 65536 கலர்களை சற்று சிரமத்துடனும் வேறுபடுத்திப் பார்க்க இயலும். ஐம்பதாயிரம் 50,000 "அந்தக் கலர் இந்தக் கலர்" புடவையைப் பார்த்து இருப்பீர்களே. அத்துடன் கருப்பும் வெள்ளையும் கலந்த 256 கிரே கலர்களும் உள்ளது.

 

மேலும் விபரம் அறிய கிளிக் செய்யவும்.