கணினி யுகத்தில்,

கணக்கு போட எத்தனை இலக்கங்கள் உள்ளன?.

நாம் உபயோகிக்கக் கூடிய கணக்கில் மொத்தம் பத்து இலக்கங்கள் உள்ளன. 0 9 இந்த பத்து இலக்கங்களை தசம இலக்கங்கள் (தஸ் என்றால் ஹிந்தியில் பத்து) என்றும் ஆங்கிலத்தில் இவற்றை டெசிமல் சிஸ்டம் (Decimal System) என்றும் குறிப்பிடுகிறோம்.

ஆனால் கம்பியூட்டர் உபயோகத்தில் 0 மற்றும் 1 இந்த இரண்டு இலக்கங்களைக் கொண்ட பைனரி சிஸ்டம் பயன்படுத்துகிறோம்.  மின்சாரத் துடிப்புகளைக் கொண்டு கணினி செயல்படுவதால், 0 என்பதை மின் துடிப்பு இல்லை என்றும், 1 என்பதை மின் துடிப்பு உண்டு என்றும் உபயோகிக்கப் படுகிறது.

பிட் ( Bit – Binary Digit ) என்று அழைக்கப்படுகின்ற இந்த 0 அல்லது 1 இலக்கங்களின் கலவையாக கொண்ட 8 இலக்க கோர்வை (Byte) பைட் எனப்படும். இத்தகைய கோர்வைகள் மொத்தம் 256 ( 2 இரண்டின் எட்டாம் படிமாணம்). இந்த 256 விதமான கோர்வைகளை ஆஸ்கி ( ASCII ) அமைப்பில் கணினியின் தட்டச்சு பலகையின் (Keyboard) மூலம் உள்ளீடு (Input) செய்வதற்குத் தேவையான அனைத்து குறியீடுகளையும் ஒழுங்கு படுத்தி உள்ளார்கள். இந்த குறியீடுகளில் எண்கள் ( 0-9 ),  எழுத்துருக்கள் (A-Z, a-z), பிரத்தியேக எழுத்துக்கள் மற்றும் கட்டளைக் குறியீடுகளும் உள்ளது.

உதாரணமாக 00110000=0, 00110001=1, 00111001=9, 01000001=A, 01100001=a மற்றும்  00100000=Space இடைவெளி

இந்த குறியீடுகளுக்குத் தேவையான ஒவ்வொரு 8 இலக்க கோர்வையும் (Byte) ஒரு எழுத்து என்று கணினி இயலில் அழைக்கப் படுகிறது.

கீழே குறிப்பிட்டுள்ள அட்டவனை பைனரியின் பெருக்குத் தொகையைக் காட்டுகிறது.

Name

Abbreviation

n Power of 2

Number of Bytes

Amount of Text could be stored (Approx)

Kilobyte

(KB)

210

1,024

1/2 page

Megabyte

(MB)

220

1,048,576

500 pages or 1 thick book

Gigabyte

(GB)

230

1,073,741,824

500,000 pages or 1,000 thick books

Terabyte

(TB)

240

1,099,511,627,776

1,000,000 thick books

Petabyte

(PB)

250

1,125,899,906,842,624

180 Libraries of Congress **

Exabyte

(EB)

260

1,152,921,504,606,846,976

180 thousand Libraries of Congress

Zettabyte

(ZB)

270

1,180,591,620,717,411,303,424

180 million Libraries of Congress

Yottabyte

(YB)

280

1,208,925,819,614,629,174,706,176

180 billion Libraries of Congress

**The Library of Congress in Washington D.C. is said to be the world's largest library with over 28 million volumes. The numbers listed in the chart above are based on the assumption that the average book has 200 pages.

Most Compact Discs (CD) can hold approximately 750 megabytes (mB) which i s roughly equivalent to 375,000 pages of text! DVDs can store 4.7 gigabytes (gB) or 2.3 million pages. The next generation of optical media, Blu-Ray discs, can hold an astonishing 27 gigabytes or 13.5 million pages which is roughly equivalent to the text contained in 67,500 books!