மனோரஞ்சிதம் கவிதைகள்
கவிதாசன் அப்துல் சமது
https://peacecraft.tripod.com/infomining/tamiluni.htm http://centamil.blogspot.com
http://www.geocities.com/RainForest/Vines/6670/
The page contain Tamil Unicode. To view properly, click View menu->Encoding-> select Unicode(UTF- 8)
அட்டவணை - Index
TOC \o "1-1" \h \z \u
அன்னையே, தந்தையே
நீவிர் இருந்திடில்,
மகிழ்வுடன் கண்டிடுவீர்.
அல்லதால்,
காண்பவர் அனைவரும்
புகழும் வாழ்த்தினை,
உம்மிடம் சமர்ப்பித்தேன்.
அன்பு மலர்களை
அடுத்த வீட்டு
இதய வாசலில்
எடுத்து வையுங்கள்,
அந்தக் கதவு திறக்கும்,
அதன் உள்ளிருந்து
இறை அருளோடு
இன்ப மனம் பொங்கி
உமை வந்தடையும்.
இன்றிலிருந்து செலுத்துங்கள்,
அனைத்து உயிர்களுக்கும்
அன்பு மலர்களை.
வானொத்த கண் இமைகள்,
அதன்
வடிவொத்த கண்ணழகு,
உன்
வேல் ஒத்த பார்வை
என்
விழி கண்டு நாணிடுமோ,
சீர் ஒத்த பாடல்
சிறப்பெய்தும் குறள் போல,
நீயொத்த தமிழ் மகள்
நாளும் என் காதலியே.
இன்றோடு இவ்வுலகுக்கு வந்து
இருபத்திரண்டு பூர்த்தி..,
இதுவரை என் வாழ்வில்
இது போல் கண்ட தில்லை..,
எம் தந்தையும் அவரை
இருவிழியால் கண்ட தில்லை..,
இளவானில் நேற்று
கருஞ்சூரியனைக் கண்டேன்.
கருநிறம் அகன்ற பின்,
சுப்பிரமணிய பாரதி எனும்
செஞ்சூரியன் சிவந்து வந்தான்.
அவன் முக ஒளியின் கற்றை, என்
மனதை தாக்கிய
மறுகணம் முதல்
மறவாமல் பார்க்கிறேன்,
மனக்கண்ணால் பாரதியை.
என்
எண்ணத்தில்,
புதிய அலை தோன்றி,
என்னை அறியாமல்
எழுதத் தூண்டியது.
எதை எழுதுவது எழுது கோலால்,
எதையாவது எழுது என,
என் கரங்களுக்கு
எண்ணம் கட்டளை இட்டது.
எழுத நினைத்த நொடி முதல்,
எழுதுகிறேன், எழுதுவேன்.
எக்காளமிட்டு அவற்றை
எதிர்ப்போர் எதிர்க்கட்டும்.
ஏன் எனக்காகத் தான்
எழுதுகிறேன் நான்.
என் எழுத்துக்கு,
என்றும் முதல் வாசகன் நானே.
அனைத்தையும் படைத்தவன்
அவற்றை ஏன் படைத்தான்,
அனைத்தும் பார்த்து வியக்க.
அதனால் நானும் படைக்கிறேன்,
அறிவில் உதித்தவற்றை.
சமுதாயக் கூடத்தில்
காட்சிப் பொருளாகி விட்டாள்,
கல்லூரி வயதினைக்
கடந்து விட்ட ஒரு மாது.
அவள்
கனவுக் கடலுக்கு,
குத்தகை தந்துவிட்டு
அனுதினமும் வலை வீசினாள்.
ஆனால்,
அவள் வலையில்
ஒரு மீனும் சிக்கவில்லை.
குமுறி நெஞ்சம் அழுகிறாள்,
கல்லூரி வயதினைக்
கடந்து விட்ட அம் மாது.
கனவுப் பஞ்சம் ஆனதினால்,
கடனாகக் கிடைக்கும் என்ற
கற்பனை ஓட்டத்துடன்
கனவு வங்கியைத் தேடுகிறாள்,
கல்லூரி வயதினைக்
கடந்து விட்ட அம் மாது.
கானல் நீராகி விடுமோ
கனவில்லா தன் வாழ்வென்று,
கணவன் ஒருவனைத் தேடுகிறாள்,
கல்லூரி வயதினைக்
கடந்து விட்ட அம் மாது.
மண்ணின் மைந்தர்களே,
நீங்கள் நம்பினால் நம்புங்கள்.
அரசியல் வாதிகளும்,
ஆளும் வர்க்கத்தினரும்,
உங்களுக்காக பல
நலத்திட்டங்கள் தந்துள்ளனர்.
கள்ளச்சாராயத்தை ஒழித்துவிட்டு
நல்ல சாராயம் தந்தார்கள்.
உங்களின் எதிர்க்காலத்திற்காக,
கோடிகள் தர நினைத்து,
வாரம் முழுதும் சேர்த்த
உங்கள் பணத்திற்கு
ஒரு வாரப் பரிசுச்சீட்டும்,
மாதம் முழுதும் சேர்த்த
உங்கள் பணத்திற்கு
ஒரு மாதப் பரிசுச்சீட்டும் தந்து,
இறுதியில் உங்களை
தெருக்கோடியில் நிறுத்தி விட்டார்கள்.
காலையில்
கஞ்சிக்கு அல்லாடும் நீங்கள்,
மாலையில்
குதிரைச்சவாரி செய்து,
குப்புற விழுவதேன்.
குடிமக்களே உங்களை,
காலம் பூராவும் அவர்கள்,
அடிமைத் தளத்தில்
ஆழ்த்தி விட்டார்கள்.
மண்ணின் மைந்தர்களே,
நீங்களாக திருந்தாவிட்டால்,
நிச்சயம் சீரழிந்துப் போவீர்கள்.
உலகிலேயே உயர்ந்த சிகரம்,
காதலின் நினைவிடம் தாஜ்மஹால்,
இன்னும் பல அதிசயம்
எங்கள் நாட்டில் உள்ளது.
பசியிலே பல கோடிப் பேர்கள்
ஆனால், கோடிகள் செலவழித்து
அணுகுண்டுகள் வெடிப்பார்கள்.
மாதச்சம்பளம் ஒரு ரூபாய், அவர்கள்
மாளிகையில் வாழ்வார்கள்.
மாதச்சம்பளம் நூரு ரூபாய், ஆனால்
மண் குடிசையில் வாழ்வார்கள்.
வாழத் தெரிந்தவர்களுக்கு
வரிவிலக்கு,
வாழத் தெரியாதவர்களுக்கோ, அதில்
விதிவிலக்கு.
பசியினால் பத்து ரூபாய் திருடினால்,
அது சுயநலம்,
அவன் குற்றவாளி.
பதவியில் பல கோடி திருடினால்,
அது பொதுநலம்,
அவன் அரசியல்வாதி.
ஆதவன் கடல்மடி தவழ,
அனுதினம் முகம் தாழும் தாமரையே,
காதலன் கடல் மூழ்கி முத்தெடுக்க,
காணத்தேடி நீயும் கீழ் நோக்க.
காதலன் சுகம் தேடி மேல் வரவே,
காலையில் நேர் கொண்டு நீ வரவேற்க.
ஆயிரம் மாதம் நீ பார்த்தாலும்,
ஆசை தான் என்றும் தீராதே.
செல்லும் கணமெல்லாம், வழி
சொல்லாமல் மணம் அழுதிடுமே.
இரவைத் தழுவ இருந்தும்,
ஏன் இந்த,
சாயங்கால மேகங்கள்
சிங்காரித்துக் கொள்கின்றன.
அன்புள்ள பெற்றோருக்கு,
அஞ்சலி எழுதும்,
இறுதி அஞ்சல்.
வரதட்சினை இல்லாமல்
வரன் வந்ததால்,
வாழ வழி தேடி,
வாழ்ந்த வீடு விட்டு,
வேறு வீடு புகுந்தேன்.
ஆனால்,
விதி என்னை
வீழ்த்தி விட்டது.
விடுதலை கிடைக்கும் என்று
வீடு விட்டு போனால்,
வசைகள் என்னை வரவேற்கின்றன.
விழுங்களோடும்
வடுக்களோடும்
வாழ்ந்து வருகிறேன்.
கண்கள்,
ஒளி வீசிடும் அகல் விளக்கு.
மாட்டு(ம்) பெண் வந்ததும்,
மாறி விடுவதேன் மாமியின் கண்கள்.
பன்னீர் அருந்துவதாய்,
கண்ணீரைச் சுவைப்பார்கள்.
அவள் (வாழ்க்)கையை நசுக்குவது,
அது வேறு யாறும் அல்ல,
அம்(மா)மிக் குழவி.
அதனால் அவள் புகுந்ததோ,
அக்கினிப் பிரவேசம்.
மறு ஆடி வந்து,
மஞ்சள் நீராடும் முன்பு,
மண்ணெண்ணையில் அவள்,
தீ நீராடி விட்டாள்.
அகல் விளக்கே,
தீபாராதனைக்குப் பயன்பட்ட நீ,
திடீரென அந்(து)தப் பூச்சியை
அழித்ததேன்?.
இடைத்தரகன் ஆரம்பித்தான்,
இல்லற ஏலத்தை.
வசீகரமான ஒரு வாலிபன்
விலைக்கு வருகிறான்.
வயது வந்த பெண்களின்
வயோதிக தந்தைகளே,
வசதிற்கேற்ப உங்களின்
விலையைக் கூறுங்கள்.
அவசரத்தில் ஒரு தந்தை
அடிமாட்டு விலையைக் கூற,
அமைதி இழந்த மகளோ, அதில்
அஞ்சாமல் குறுக்கிட்டாள்.
சீர்கெட்டுப் போன, இந்த
சதைப் பிண்டம் வேண்டாம்.
சமுதாயச் சந்தையே, இதனால்
சீரழிந்துப் போய் விடுமே.
காந்தி ஒரு கர்மயோகி,
காவி தரிக்காமல்,
கதர் உடுத்தி,
காலனின் துணையோடு,
கடுந்தவம் மேற்கொண்டு,
காலனி நீக்கி,
காரியத்தைச் சாதித்தார்.
சத்தியம் சாகவில்லை,
சான்றுடன் அவர்
சரித்திரம் கூறகிறது.
ஆனால் இன்று,
காந்தியத்தில் காதலில்லை,
காரியத்திலும் விவேகமில்லை.
வியர்வை சிந்தி உழைத்த,
அவர்களின்
வானுயர்ந்த மாளிகைகள்.
அதன் தெருவோர படிக்கட்டுகள்,
இரவு வந்ததும்,
இந்த தெருவோர நாயகர்களின்,
கட்டில்கள் ஆகிவிடும்.
அவர்களின் கூட்டுக்குடும்பம்,
அங்கு கொடி கட்டிப் பறக்கும்.
அவர்களின்,
சோர்ந்து போன உடலும்,
உறக்கம் சூழ்ந்த கண்களும்,
விடியல் வருவதை வெருக்கும்.
ஆனால், அவர்களின் மனதோ,
இருள் சூழ்ந்த வாழ்வில்,
இனிய விடியலை,
என்றுமே எதிர்பார்த்து இருக்கும்.
பொல்லாத உலகின் போக்கில்,
பொய் சொல்ல நினைத்தாலும்,
பழகாத மனமே நீயோ,
பொய் சொல்ல மறுக்கின்றாயே.
அடுத்தவரால் அல்லல் பட்டு,
ஆவேசம் கொண்ட போதும்,
அடம் பிடித்து நீயோ என்னை,
அமைதியில் ஆழ்த்துகின்றாயே.
மனம் கொண்டு வாழாமல்,
பணம் உண்டு வாழுகின்ற,
பித்தர்களோ பிதற்றுகின்றார்,
பிழைக்கத் தெரியாதவன் நானென்று.
அவமானம் கொண்டிடவா,
அழகான மனம் கொண்டதற்கு,
உள் மனமே என்னிடம்,
உண்மையைத் தான் சொல்லிவிடு.
காசு கொடுத்து,
கிழிசல் ஆடை,
வாங்கி உடுத்தும்,
கந்தல் ஆகிப் போன
காலம் இது.
மின்மினிப் பூச்சுகளின்
மேற்கத்திய நாகரீகம்,
கண் மூடிப் போவதற்குள்
கலைந்து விடும் கனவாக.
அந்த
காலச் சுழலின்
போக்கை அறிந்து,
எதிர் நீச்சலிடும்,
நான் ஓர்
பழமை விரும்பி.
சிறையில் அடைப்பட்ட
சிறுத்தைப் போல,
சிந்தையில் அடங்காமல்
சீறுது மனம்.
விந்தை பல செய்யும்
வியத்தகு மனதை,
மந்தை ஆடு மத்தியில்
மயங்கச் செய்வதேன்.
சிதறிய சித்தம் அதை
செம்மையாய் ஒன்றினைத்தால்,
கோல் கண்ட குறங்கு போல
அடிபணியும் ஆத்மனிடம்.
புடவை மேகம்
முழுதும் சூழ்ந்து,
மிளிரும் மங்கை.
குறை ஆடை
கவர்ச்சி அலையில்,
சிக்கிய குமரி.
பெண்ணினமே,
பெண் உரிமையை
போற்றுகிறேன்.
உங்களின் உரிமை
மறுக்கப் பட்டால்
போராடுங்கள்.
உங்களின் உரிமை
மீறப் பட்டாலும்
போராடுங்கள்.
செல்லக் கனியமுதே, என்
செந்தமிழும் நீ தானே,
இன்பத் தேனமுதே, என்
இன்னுயிரும் நீ தானே.
பாடும் பூங்குயிலே, உனை
பாடிடுவேன் நான் தானே,
ஆடும் மயிலே, உனை
தாலாட்டிடுவேன் நான் தானே.
உன்னை எனைப் போல,
உயர்வாய் அவன் படைத்தானே.
நீடித்த ஆயுளுடன்
நம்மை என்றும் காப்பானே.
பாட்டுக்கு ஒரு புலவன்,
பாரதியின் சீடனிடம்,
பாட வருமா என்றால்,
பாவை ஒருத்தி.
சிங்கத்தையா சீண்டுகிறாய்,
சினம் கொண்ட சீடன்,
சளைக்காமல் கவிதை பாட
சூளுரைத்தான் அவளிடம்.
நட்டநடு நிசியில் என்னை
நீயெழுப்பி பாடச் சொன்னாலும்,
நித்தம் பல பாடலினை,
நான் பாட இயலும் பெண்ணே.
வாளுக்கே அஞ்சாத கவியின்,
வீரத்தைக் காட்டிடவே,
வரிந்துகட்டி எழுதி விட்டான்,
வஞ்சம் தீர்த்திடவே.
வலைப்பின்னல் வழியே,
வாழ்க்கைத் துணையைத் தேடிடும்,
வாலிப நெஞ்சங்கள்.
சிகரத்தை அடைந்திட,
சிரகடித்துப் பறக்கும் சிறுசுகள்.
கண்டதும் வரும் காதல் இல்லை, இது
வலைப்பின்னல் ஊடே,
சொற்களில் மயங்கிடும்,
மாயக்காதல் இது.
வசந்தத்தை தேடி, இந்த
வலைப்பின்னலில் வீதி உலா,
காதல் தேவதை வசப்பட்டால்,
சுருதி சேர்ந்திடும் வாழ்வினிலே.
கனவு ஒன்றை கண்டு விட்டு,
கண் விழித்தால் மங்கை இவள்,
கண்ணாடியில் கண்ட போது,
கன்னங்கள் சிவந்தது வெட்கத்தால்.
மெல்லிதழை முத்தமிட்ட
மன்மதன் தான் யாரோ.
மாய வலைப்பின்னலில்
மிதந்து வந்த காதலனோ.